Sheela Rajkumar Marriage Photo

நடுக்கடலில் திரௌபதி பட நடிகை ஷீலா ராஜ்குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Sheela Rajkumar Marriage Photo : தமிழ் சினிமாவில் வெளியான டூலெட் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஷீலா ராஜ்குமார். இந்த படத்தினை தொடர்ந்து இவர் மோகன்ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் தொடங்கி தற்போது யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள மண்டேலா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடுக்கடலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சில தன்னுடைய குடும்பத்தாரை அழைத்து கொண்டு தம்பி சோழரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.