Sharmi About Trisha Marriage

நடிகை த்ரஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பிரபல நடிகை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Sharmi About Trisha Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். அஜித் விஜய் ரஜினி கமல் சூர்யா தனுஷ் சிம்பு தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள பெருமையை கொண்டவர்.

தற்போது சோலோ ஹீரோயினாக வலம் வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.

நடிகை திரிஷாவின் நீண்டகால தோழியும் ஆன சார்மி திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் திரிஷா பேட்ஸ்மேனாக கொண்டாடும் கடைசி பிறந்த நாளாக இது இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால் வெகு விரைவில் திரிஷாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதை அவர் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் யார் அந்த மாப்பிள்ளை என சமூக வலைதளங்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.