Shanthanu Thanks to Fans
Shanthanu Thanks to Fans

நடிகர் சாந்தனு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shanthanu Thanks to Fans : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடம் பிடித்துவிட வேண்டும் என போராடி வருபவர். இவருக்கு தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாஸ்டர் பட வாய்ப்பு சாந்தனுவின் திரைப்பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அனைவரைப் போல சாந்தனுவும் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்து குறும்படம் ஒன்றை இயக்கி இருந்தார்.

14 வயதில் ஏற்பட்ட சோகம்.. என்னை ஏன் இப்படி படைத்தாய் கடவுளே – உருக்கத்துடன் செல்வராகவன் எழுதிய பதிவு!

இந்த குறும்படத்தை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மகிழ்ச்சி அடையச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு இயக்குனரின் மகனாக ஒரு குறும்படத்தையாவது இயக்க வேண்டாமா என்ற கேள்வி பலரின் மனதிலும் இருந்திருக்கும். அதையே தான் தானும் எண்ணி இந்த குறும்படத்தை இயக்கியதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் கொடுத்துள்ள இந்த ஆதரவு கடமையையும் பயத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

இவர்கள் இயக்கியிருந்த குறும்படம் கொஞ்சம் கொரானா கொஞ்சம் காதல் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. மேலும் இது ஐ போனிலும் சாதாரண வெளிச்சத்திலும் எடுக்கப்பட்ட குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.