Shanthanu Says Sorry to Ajith Fans
Shanthanu Says Sorry to Ajith Fans

என்ன மன்னிச்சிடுங்க தல ரசிகர்களே என பதிவிட்டுள்ளார் நடிகர் சாந்தனு.

Shanthanu Says Sorry to Ajith Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருவதால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜயின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனுவும் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் செய்த செயல் மிரண்டு போய் நிற்கும் ட்விட்டர் – இந்த அபூர்வத்தை நீங்களே பாருங்க.!

இது குறித்த பதிவில் அஜித்திற்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அஜித் ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

காமன் டிபி சாந்தனு வெளியிட இருந்த நிலையில் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் வெளியிடாமல் இருந்து விட்டார். இதனால் தான் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.