Shanthanu About Nepotism in Tamil cinema
Shanthanu About Nepotism in Tamil cinema

தமிழ் சினிமாவின் மீது பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார் நடிகர் சாந்தனு.

Shanthanu About Nepotism in Tamil cinema : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சாந்தனு. பன்முகத் திறமை கொண்ட இயக்குனர் பாக்யராஜின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார்.

தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க???? என பதிவிட்டிருந்தார்.

லாக் டவுன் காலத்தில் எடுத்த அதிரடி முடிவு, ஓவரா ஃபீல் பண்ணும் சாந்தனு – வைரலாகும் வீடியோ!

இவருடைய இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தன்னுடைய கருத்தை பதிவு செய்திருப்பது மேலும் சலசலப்பை அதிகரித்துள்ளது.

அதாவது சாந்தனு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் #Nepotism இங்கேயும் உள்ளது.. அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனு சொல்லும் குரூப் எது அந்த குரூப்பில் இருப்பது யார் என்பது குறித்த கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்து வருகின்றன.