மாஸ்டர் படத்திற்காக தேசிய விருது வாங்கியதாக சாந்தனுவை கலாய்த்து மீம் ஒன்று வைரலாக அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Shantanu Reply to Master Trolls : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இயக்குனர் பாக்யராஜின் மகனான இவர் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார். மீண்டும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒளிபரப்பான தங்கம் என்ற தொடரில் நடித்து இருந்தார். இதில் சாந்தனுவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய அரசின் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருநத நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக சாந்தனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுவது போல மீம் ஒன்றை உருவாக்கி அதனை வைரலாக்கியுள்ளனர்.

இதனால் கடுப்பான சாந்தனு ஒருவேளை ட்ரோல் செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்திற்காக ஏன் இப்படி செய்கிறீர்கள்?? என் மீது வீசப்படும் கற்களுக்கு மிக்க நன்றி. அது நிச்சயம் ஒரு சாதனை படைக்க உதவும். ஒருநாள் இதுவும் நடக்கும் நானும் தேசிய விருது வாங்குவேன் என சபதம் எடுத்துள்ளார் நடிகர் சாந்தனு.