என்ன தைரியம் இவருக்கு என சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட விஜயை பாராட்டி தள்ளியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Shantanu Comments About Vijay Vote Cast : தமிழகத்தில் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் மொத்தமாக 71%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. சென்னையில் தான் குறைந்த பட்ச அளவில் வாக்கு பதிவானது.

சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்‌. அதிலும் குறிப்பாக விஜய்யின் செயல் பல வகையில் மக்களை பேச வைத்துள்ளது.

நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார். பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து விஜய் இவ்வாறு செய்ததாக பேச்சுக்கள் கிளம்பின.

இந்த நிலையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு என்ன தைரியம்யா இவருக்கு என பாராட்டியுள்ளார் நடிகர் சாந்தனு.