Shankar's Next Movie Update
Shankar's Next Movie Update

ஷங்கர் இயக்கத்தில் விஜய் விக்ரமும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Shankar‘s Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் விக்ரம். தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் ஹீரோவாகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேபோல் திறமையான நடிகர் என பெயர் எடுத்தவர் சியான் விக்ரம். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஓவர் மேக்கப் தான், ஆனால் செம அழகு.. எப்படி இருந்த ரோபோ ஷங்கர் மகள் இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

அதுமட்டுமல்லாமல் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து விஜய்யும் விக்ரமும் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் இந்தியன்2 படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் கடந்த வருடமும் இதே போல் ஒரு தகவல் வெளியானது ஆனால் அந்த கூட்டணி அமைய வில்லை. தற்போது மீண்டும் அதே போல் பேசத் தொடங்கியுள்ளனர் இம்முறையாவது இந்த கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான்காவது முறையாக ஹிட் கொடுத்த இயக்குனருடன் இணையும் சூர்யா – வெளியானது செம மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் பரவிவரும் வைரஸ் தாக்கம் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் தள்ளி போய் உள்ளது.

இதனையடுத்து எப்படியும் தீபாவளிக்கு படம் ரிலீசாகி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.