Shankar Decision on Indian 2

ஷங்கர் எடுத்த திடீர் முடிவால் நடிகர் விவேக்கும் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது.

Shankar Decision on Indian 2 : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே நிறைவடையும் போது இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் அச்சுறுத்தல் காரணமாக தொடங்காமல் இருந்து வருகிறது.

மேலும் இந்தியன் 2 படத்தை விடுத்து சங்கர் ராம் சரணை வைத்து ஒரு படத்தையும் பாலிவுட்டில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் சங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் மாதம் வரை ப்ரீயாக இருப்பதால் அதற்குள் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக கூறி உள்ளார். மேலும் நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவருடைய காட்சிகளை மீண்டும் படமாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விவேக்கின் நீண்ட நாள் ஆசை கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்தியன் 2 படத்தில் தான் நிறைவேறியது. இந்த நிலையில் விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் வேறொருவரை வைத்து எடுக்க வேண்டும் என கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.