Shakeela Daughter in SunTV Serial

ஷகிலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

Shakeela Daughter in SunTV Serial : தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர் ஷகிலா. நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் அறிமுகமான இவர் தடம் மாறி கவர்ச்சி நடிகையானார்‌. இதனால் இவர் மீதான கண்ணோட்டமும் மாறியது.

ஆனால் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை ரசிகர்கள் பலரும் அம்மா என்று அழைக்க தொடங்கியுள்ளனர். மேலும் ஷகிலா மிலா என்ற ஒரு திருநங்கை பெண்ணை வளர்த்து வருகிறார்.

இவர் குக் வித் கோமாளி பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகின. இப்படியான நிலையில் தற்போது மிலா சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.