குஷ்புவோடு என்னை ஒப்பிடாதீர்கள் என்னுடைய ஆட்டத்தை இனிமேதான் பார்ப்பீங்க எனவே அரசியலில் இறங்கிய ஷகிலா பேட்டியளித்துள்ளார்.

Shakeela About Political Entry : செல்வி ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு பல திரையுலக பிரபலங்கள் அரசியலில் இறங்கி வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மூலமாக இரண்டாவது முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவினார். இந்த நிலையில் தற்போது நடிகை ஷகிலா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் என்னை குஷ்புவோடு ஒப்பிடாதீர்கள். அவர் அரசியலில் எனக்கு சீனியர். இப்போதுதான் அரசியலுக்குள் வந்துள்ளேன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

குஷ்புவின் இடத்தை நிரப்ப நான் வரவில்லை. இனிமே தான் என்னுடைய ஆட்டத்தை நீங்க பார்க்கப் போகிறீர்கள் என பேசியுள்ளார்.