Shakeela

500 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன் ஆனாலும் இது மாதிரி ஒரு பீலிங் இருந்தது இல்லை என நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.

Shakeela About Cook With Comali : இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஷகிலா. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் திரையுலகில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவிற்குள் வந்து தடம் மாறிய கவர்ச்சி நடிகையானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கவர்ச்சி படங்களில் நடிப்பதை விடுத்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மக்களின் மனதில் மிக பெரிய இடம் பிடித்துள்ளார்.

இதுவரை ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்தவர்கள் அவரை அம்மா என அழைக்கத் தொடங்கியுள்ளனர். அவர் மீதான கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ரன்னராகவும் அவர் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது நிகழ்ச்சி குறித்து சகிலா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது மாதிரி ஒரு பீலிங் இருந்தது இல்லை என்று கூறியுள்ளார். ஷகிலாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.