Shakeela 4th Finalist in Cook With Comali

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்வாகியுள்ளார் நடிகை ஷகிலா.

Shakeela 4th Finalist in Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் காமெடியின் சமையலும் கலந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். குக்குகளாக அஸ்வின் கனி பாபா பாஸ்கர் ஷகிலா பவித்ரா தர்ஷா குப்தா மதுரை முத்து தீபா ஆகியோர் பங்கேற்றனர்.

பைனலிஸ்ட்டாக அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவர் மட்டுமே தேர்வாகி இருந்தனர். இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்றனர். இதில் ஷகிலா வெற்றி பெற்று நான்காவது பைனலிஸ்ட்டாக வெற்றி பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்று மாலை தெரிந்து விடும்.