Senthil Kumari About Vijay

நான் விஜய் தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என 47 வயது சீரியல் நடிகை கூறியிருப்பது ஷாக்கை கொடுத்துள்ளது.

Senthil Kumari About Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் என பலரும் விஜயின் ரசிகர், ரசிகைகளாக உள்ளனர். பல பெண் பிரபலங்கள் விஜயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக கூறியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் சித்தி வேடத்தில் நடித்துவரும் செந்தில்குமாரி பேட்டி ஒன்றில் விஜயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். 41 வயதாகும் இவர் விஜய்யை சந்திப்பதற்காக தன்னுடைய கணவரிடம் அடி வாங்கியதாக கூறியுள்ளார். நெற்றியில் காயம் ஏற்பட்டு அந்த ரத்த காயத்துடன் விஜயை சென்று சந்திக்க அவர் என்ன எனக் கேட்டதாகவும் நடந்ததை கூற முதலில் மருந்து போடுங்க என விஜய் அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். இவர் வெள்ளித்திரையில் பசங்க, தோரணை, பிஸ்தா, திட்டக்குடி, நீயும் நானும் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.