புடவைக்கு ஏற்ற வித்தியாசமான பிளவுஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் செம்பருத்தி ஷபானா.
Sembaruthi Shabana Traditional Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக இது இருந்து வருகிறது.
இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஷபானா. இவை பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சீரியலில் இருக்கும் சபானாவிற்கும் நிஜ வாழ்க்கையில் ஷபானாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இவர் புடவை அணிந்து வித்தியாசமான புளவுஸில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்