Sembaruthi Serial Aadhi Character Replacement

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக யூடியூப் பிரபலம் ஒருவர் கமிட்டாகி ஆகி உள்ளார்.

Sembaruthi Serial Aadhi Character Replacement : தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி-யில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருபவர்கள் செம்பருத்தி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

அதற்கு காரணம் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக் ராஜ் மற்றும் நாயகியாக நடித்து வரும் ஷபானா ஆகியோர் இடையேயான கெமிஸ்ட்ரி தான்.

ஆனால் தற்போது இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் வெளியேறியுள்ளார். படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக இந்த சீரியலில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பணியாற்றி வந்த அக்னி என்பவர் கமிட் ஆகி உள்ளார்.

ஆனால் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இனி செம்பருத்தி சீரியலை பார்க்கப் போவதில்லை என கூறி வருகின்றனர்.

கார்த்திக் ராஜின் வெளியேற்றத்தினால் செம்பருத்தி சீரியல் டிஆர்பி குறைந்தாலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/CI0wHWNhR4y/?igshid=e3wvv1bcy3ba
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.