விஜய் மட்டுமல்ல தனக்குச் சிம்புவையும் ரொம்ப பிடிக்கும் என செம்பருத்தி பார்வதி தெரிவித்துள்ளார்.
Semaruthi Sabhana About Simbu : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று செம்பருத்தி.
இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு வந்தும் தற்போது சீரியலில் பிசியாக இருப்பதால் அவற்றை நிராகரித்து வருகிறார்.
சீரியல் நடிகை ஷபானா தனக்கு விஜய் மட்டும் இல்ல சிம்புவையும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அதுவும் சிம்புவிடம் அவருடைய கெத்து தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அடேங்கப்பா எத்தனை?? கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.!!
இது போன்ற கெத்தான ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்க்கும் அஜித்துக்கும் தங்கச்சியாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நானும் அஜித் சாரும் ஒரே கலர் என்பதால் ஈஸியாக மேட்ச் ஆகி விடும். அவர்களுக்கு தங்கச்சியா நடிப்பது தனக்கு பெருமையான ஒன்று என தெரிவித்துள்ளார்.
செம்பருத்தி சூட்டிங் ஸ்பாட்டில் அடங்காத ஒரே ஆள் நம்பர் பார்வதி தான். சூட்டிங்கில் நான்தான் விஜயோட தங்கச்சி என்ன சொல்லி சொல்லி அனைவரையும் வெறுப்பேற்றுவாராம். சீரியலில் தான் பவ்யமான கேரக்டர் நிஜத்தில் செம அராத்து.