தளபதி 65 படத்தில் செல்வராகவன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Selvaraghavan in Thalapathy65 Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் விஜய்க்கு வில்லனாக பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த இந்த படத்தில் பிரபல நடிகரான இயக்குனர் செல்வராகவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஆயுதம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.