Selvaraghavan Emotional Post
Selvaraghavan Emotional Post

14 வயதில் செல்வராகவன் ஒரு கடிதம் எழுதுவது போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Selvaraghavan Emotional Post : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் அமைந்தது.

ஆனால் செல்வராகவன் தன்னுடைய 14 வயதில் ஏற்பட்ட ஒரு சோகத்தால் தான் பட்ட கஷ்டங்களையும் வலிகளையும் பதிவு ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

உங்களுக்கு எப்படி ஆக்ஷனிலும் காமெடி வருது?? ஜெயம் ரவி கேள்விக்கு விஜய் கொடுத்த ஆச்சரிய பதில் – வீடியோ இதோ!

14 வயதில் நான் எங்கு சென்றாலும் கேலி கிண்டல் மாகத்தான் என்னை பார்த்தார்கள். காரணம் நான் ஒரு மாற்றுத்திறனாளி. ஒரு கண் பார்வையை பெற்றவன்.

பல நாள் கடவுளிடம் ஏன் என்னை இப்படி படைத்தால் என அழுது உள்ளேன். அதன் பின்னர் தற்போதைய செல்வராகவன் அவருக்கு அறிவுரை வழங்குவது போல அந்த கடிதத்தை மாற்றியுள்ளார்.

இன்னும் பத்து வருடத்தில் இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும். கேலி கிண்டல் செய்வதற்காக அல்ல, உன்னுடைய திறமையை பாராட்டுவதற்காக. நீ ஜீனியஸ் என பலரால் புகழப்படுவாய்.

கரோனா வைரஸ் எதிரொலி : அமெரிக்க மலையாளி Sandeep J.L – இன் த்ரில்லர் ஃபிலிம் ‘OUTRAGE’ ரிலீஸ் தள்ளிப் போனது!

உன்னிடமிருந்து கடவுள் ஒன்றை எடுத்துக்கொண்டால் அதை விட பலமான ஒன்றை நிச்சயம் கொடுப்பார். உன்னுடைய படங்களால் பலர் தங்களது வாழ்க்கை மாறி இருப்பதை உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.