Seenu Ramasamy Support to Vijay Sethupathi
Seenu Ramasamy Support to Vijay Sethupathi

விஜய் சேதுபதி கோவில் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பிரபல இயக்குநர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.

Seenu Ramasamy Support to Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் மனிதனை மனிதன் தான் காப்பாற்றும் கடவுள் வரமாட்டார் என கூறி சர்ச்சைக்கு உள்ளானார்.

அதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் ஜோதிகா பேசியதற்கு சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

உங்கள் அசிங்கப்படுத்த நாங்க வேணா நீங்களே போதும்டா.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – இதோ பாருங்கள்!

இந்த நிலையில் கடந்த வருடம் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் அவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகம் குறித்துப் பேசியது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் இது ஏற்கனவே கிரேசி மோகன் அவர்கள் பேசிய பேச்சு தான். அதைத்தான் விஜய் சேதுபதியும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இருந்த இரண்டு வீடியோக்களை வெளியிட்டு சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்.விரைவில் #மாமனிதன் திரைப்படம் வெளியாகும்,அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.