seeman
நடிகை விஜயை ஆளும் தரப்பு மிரட்டி பார்ப்பதகாவும், விஜய்க்கு எப்போதும் தான் துணையிருப்பேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது.

அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.

மேலும், ‘சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும்’ என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigil Twitter Emoji

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியதே இதற்கு பின்னணி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘ பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு தமிழக அரசு பழிவாங்குகிறது.

அவர் கூறி கருத்திற்கு எதிர் கருத்துகளை பலரும் தெரிவித்துவிட்டனர். அதன்பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்திற்கு இடையூறு செய்யக்கூடாது.

இதனால், ஜனநாயகத்தின் மீது இளம் தலைமுறையினருக்கு வெறுப்பை உண்டாக்கி விடும்.

விஜயை அச்சுறுத்துகின்றனர். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது. மேலும் அவருக்கு எப்போதும் துணையாக நான் இருப்பேன்’ எனவும் அவர் பேசினார்.