இதெல்லாம் ஒரு படமா என ரஜினி முருகன் கதையை கேட்டு படத்தை நிராகரித்துள்ளார் இளம் நடிகர் ஒருவர்.

Secrets Of Rajini Murugan : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பொன் ராம். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ரஜினி முருகன். இயக்குனர் லிங்குசாமி இந்த படத்தை தயாரித்திருந்தார்.

படத்தின் ரிலீஸின்போது லிங்குசாமி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால் படத்தின் ரிலீஸ் சொன்ன தேதியில் வெளியாகவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க அதன்மூலம் கடனை அடைத்து படத்தை ரிலீஸ் செய்தார் லிங்குசாமி.

படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்ததால் தோல்விதான் அடையும் என பலரும் கூறி வந்த நிலையில் அவர்களை வாயடைக்கச் செய்தது ரஜினி முருகன் வசூல். ஆமாம் படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது.

இந்த நிலையில் தற்போது பொன் ராம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த படத்தின் கதையை முதன் முதலில் ஆர்யாவிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் கதையை கேட்ட அவர் படத்தில் ஒன்றுமே இல்லையே எனக் கூறி நிராகரித்து விட்டார் என்று பொன் ராம் கூறியுள்ளார்.

மேலும் படம் ஹிட்டான பிறகு ஆர்யாவின் முகத்தில் ஈயாடவில்லை என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.