Secrets of Master Release Date Plan

வசூலை குவிக்க மாஸ்டர் படக்குழு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக அது மட்டும் சரியாக அமைந்தால் மாஸ்டர் வசூல் செம மாஸாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

Secrets of Master Release Date Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லன் வில்லியாக விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா, பிரேம், வர்ஷா பொல்லம்மா மற்றும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த வருடத்தில் கோடை விடுமுறையை டார்கெட் செய்து உருவான இந்தப் படம் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ரிலீஸாக முடியாமல் போனது. இதனையடுத்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு அப்போதும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழு இறங்கி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 13ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜனவரி 14 முதல் நான்கு நாட்களுக்கு பொங்கல் விடுமுறை என்பதால் படக்குழு ஜனவரி 13 டார்கெட் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதனால் ஜனவரி 13 முதல் அடுத்த 5 நாட்களுக்கு மாஸ்டர் படம் மாபெரும் வசூலை பெற ஏதுவாக இருக்கும் என்பதால் படக்குழு இந்த தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் ட்ரெய்லரில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.