Secrets of Ayya Movie

ஐயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Secrets of Ayya Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் ஐயா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

இயக்குனர் ஹரி இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல்ஹாசன் தான் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதையை அவர் கமல்ஹாசனை மனதில் வைத்து தான் எழுதியுள்ளார். கமலிடம் கதை கூற அவருக்கு பிடித்துப்போய் ஓகே என்று கூறியுள்ளார். ஆனால் சில இடங்களில் மட்டும் சில மாற்றங்களைச் செய்யுமாறு தெரிவித்துள்ளார். அவர் கூறிய மாற்றங்கள் இயக்குனருக்கு சரியானதாக தோன்றவில்லை. இதனால் கமல்ஹாசன் இப்படத்திலிருந்து விலகி கொண்டுள்ளார்.

அதன் பின்னர் தான் சரத்குமார் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து உள்ளார் படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது‌.