Sathru Movie Review

Sathru Movie Review : ஆர்.டி இன்பினிட்டி டீல் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் நவீன் நஞ்சுண்டன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் கதிர், சிருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணீ மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சத்ரு.

கதைக்களம் :

5 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பல் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி பெற்றோர்களிடம் பணம் பறித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவத்தின் மூலமாக இப்படத்தின் கதையும் தொடங்குகிறது. அந்த குழந்தையை போலீஸ் அதிகாரியான கதிர் காப்பாற்ற அந்த 5 பேர் கும்பலில் இருந்து ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.

இதனால் கதிர் மீது வெறி கொண்ட அந்த கும்பல் கதிரையும் அவரது குடும்பத்தையும் கொலை செய்யும் வேளைகளில் இறங்குகிறது. இந்த கும்பலின் திட்டத்தில் கதிரின் அப்பாவான பொன்வண்ணனும் கொல்லப்படுகிறார்.

அதன் பின்னர் கதிர் இந்த கும்பலை எப்படி ஒழித்து காட்டுகிறார்? தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

கதையை பற்றிய அலசல் :

பலமுறை தமிழ் சினிமா அலசிய காயப் போட்ட வழக்கமான போலீஸ் கதையாக தான் இந்த படமும் உருவாகியுள்ளது.

பாடல்கள் என எதுவும் இல்லை. ஆக்ஷன் த்ரில்லர் படம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தின் ஆக்ஷன் உள்ளது. ஆனால் த்ரில்லர் மிஸ்ஸிங்.

கதிர் :

கதிர் ஒரு போலீஸ் அதிகாரியாக நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பில் குறை இல்லை. ஆனால் அவரது மென்மையான குரல் போலீஸ் கெட்டப்புக்கு ஒத்து போகவில்லை.

ஸ்ருஷ்டி டாங்கே :

பேருக்கு மட்டும் நாயகியாக படத்தில் வந்து செல்கிறார். சாதாரணமாக ஹீரோயிசம் பேசும் படங்களில் கூட ஹீரோவுடன் நாயகிக்கு டூயட் பாடும் வேலை இருக்கும். அனால் இந்த படத்தில் அதுவும் இல்லை.

5 வில்லன்கள் :

5 வில்லன்களும் தங்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக லகுபரின் நடிப்பு பிரமாதம்.

தொழில்நுட்பம் :

இசை :

இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமையக்க சூர்ய பிரசாந்த் பிண்ணனி இசை கொடுத்துள்ளார். இருவரும் அவரது பணிகளை ஒழுங்காக செய்துள்ளனர். சில இடங்களில் மட்டும் கதைக்கேற்ற இசை இல்லையோ என எண்ண தோன்றுகிறது.

ஒளிப்பதிவு :

மகேஷ் முத்துசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவதே அவரது வேலையாக இருந்துள்ளது. அதையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

பிரசன்னா ஜி.கே இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். படத்திற்கு தகுந்தாற் போல அவரது வேலையை செய்துள்ளார்.

ஸ்டண்ட் :

விக்கி இப்படத்திற்கு ஸ்டண்ட் வேலைகளை மேற்கொண்டுள்ளார். கதிருக்கு எந்த எ,அளவிற்கு ஆக்ஷன் வரும் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ற போல பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இயக்கம் :

நவீன் நஞ்சுண்டன் தமிழ் சினிமா பார்த்து பழகி போன ஒரு கதையை தான் மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் படியாகவே கதையை கொண்டுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. கதிரின் நடிப்பு
2. ஆக்ஷ்ன் காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. திரைக்கதை
2. விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
சத்ரு விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
sathru-movie-reviewமொத்தத்தில் சத்ரு சாதாரண போலீஸ் கதையாக தான் உருவாகியுள்ளது.