Sasikumar Arrest
Sasikumar Arrest

சசிகுமாரை மும்பையில் போலீசார் சுற்றி வளைக்க தமிழக மக்கள் ஒன்று கூடி அவரை காப்பாற்றியுள்ளனர்.

Sasikumar Arrest : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது நாடோடிகள் 2 படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் நடித்தும் வருகிறார்.

மேலும் நிர்மல் குமார் என்பவர் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் நடந்துள்ளது.

தர்பார் படப்பிடிப்பில் கல்லெறிந்த கல்லூரி மாணவர்கள் – உண்மையில் நடந்தது என்ன?

கேமராக்கள் இருப்பது தெரிந்தால் மக்களால் இடையூறு ஏற்படும் என்பதால் அவற்றை எல்லாம் மறைத்து வைத்து படமாக்கியுள்ளனர்.

சசிகுமார் ஓடி ஓடி வில்லன்களை வெட்டுவது போன்ற காட்சிகளை படமாக்க அங்கிருந்தவர்கள் உண்மையாக சண்டை நடைபெறுவதாக எண்ணி போலீசுக்கு தெரியப்படுத்த மும்பை போலீசார் சசிகுமாரை சுற்றி வளைத்துள்ளனர்.

அதன் படக்குழு இது படபிடிப்பு என கூறியும் நம்பவில்லை. பின்னர் அங்கிருந்த தமிழக மக்கள் சசிகுமாரை காப்பாற்றியுள்ளனர், போலீசையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.