Sarvam Thaalamayam Review

Sarvam ThaalaMayam Review : ராஜிவ் மேனன் இயக்கத்தில் லதா மேனன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, திவ்யா தர்ஷினி, நெடுமுடி வேணு, வினீத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்வம் தாளமயம்.

உலகமே இசையால் ஆனது, இசை அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது என்பதை மைய கருவாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

கதைக்களம் :

தபேலாவை தயார் செய்து தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவரின் மகன் ஜி.வி.பிரகாஷ். இவர் மாபெரும் மிருதங்க வித்துவானான நெடுமுடி வேணுவின் இசையை கேட்டு தானும் ஒரு வித்துவானாக வேண்டும் அதற்காக வேம்பு ஐயரிடம் ( நெடுமுடி வேணு ) இசையை கற்று கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இசையை போதிக்க வேம்பு ஐயரும் அவரின் உதவியாளருமான மணியும் ( வினீத்தும் ) மறுக்கின்றனர்.

இதனையடுத்து ஜி.வி பிரகாஷ் எப்படி வேம்பு ஐயரிடம் மாணவனாக சேர்ந்தார் பின்னர் இவர்களுக்குள் நடந்தது என்ன? ஜி.வி.பிரகாஷின் கனவு நிறைவேறியதா? என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

ஜி.வி.பிரகாஷ் :

இசையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நெடுமுடி வேணு :

நெடுமுடி வேணு அவர்களின் நடிப்பு வழக்கம் போல் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. அவர் இந்த படத்தில் மிருதங்க வித்துவானாகவே வாழ்ந்துள்ளார்.

வினீத் :

வினீத் இப்படத்தில் நெடுமுடி வேணுவின் உதவியாளராகவும் அதன் பின்னர் ஜி.வி.பிரகாஷை தன்னுடைய மாணவனாக நெடுமுடி வேணு சேர்த்து கொண்டதால் இவர்கள் இருவருக்கும் வில்லனாக மாறி விடுகிறார் வினீத். வினீத்தின் நடிப்பும் படத்தில் பாராட்டும் படியாக அமைந்துள்ளது.

அபர்ணா பால முரளி :

படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் நடிப்பு, ஜி.வி பிரகாஷுடனான காதல் காட்சி ஆகியவை யதார்த்தமாகவும் அழகாகவும் அமைந்துள்ளன.

திவ்ய தர்ஷினி :

தொகுப்பாளினி டிடி இப்படத்திலும் தொகுப்பாளியாகவே நடித்துள்ளார். படம் முழுவதும் உலா வரும் கேரக்டரில் தனக்கான பகுதியை சிறப்பாக நடித்துள்ளார்.

தொழில்நுட்பம் 

இசை :

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையை மையமாக கொண்ட படம் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ற வகையில் படத்திற்கு இசையமைத்து பலம் சேர்த்துள்ளார்.

எடிட்டிங் :

அந்தோணியின் எடிட்டிங் இப்படத்தில் பக்காவாக கை கொடுத்துள்ளது. படத்தை பார்த்தவர்களுக்கு சற்றும் சலிப்பு ஏற்படாத வகையில் திறமையாக எடிட்டிங் செய்துள்ளார்.

ஒளிப்பதிவு :

ரவி யாதவின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. கிராமம், நகரம் என இரண்டிலும் நம்மை கதையோடு ஒன்றி போகும் அளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜி.வி பிரகாஷ், நெடுமுடி வேணு, வினீத் ஆகியோரின் நடிப்பு சிறப்பு
2. இசை அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தை மையமாக கொண்டது.

YouTube video

REVIEW OVERVIEW
சர்வம் தாளமயம் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
sarvam-thaalamayam-reviewமொத்தத்தில் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம்.