Sarkar Varalaxmi

Sarkar Varalaxmi : சர்கார் படம் பார்ப்பதற்காக வரலட்சுமி சரத்குமார் காலையில் பிரபல தேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு நடந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படத்தை பார்ப்பதற்கு பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். முதல் முறையாக விஜயுடன் இணைந்திருப்பதால் படத்தை பார்க்க சென்னையில் பிரபல திரையரங்கில் ஒன்றான வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது சர்கார் படத்தின் டைட்டில் கார்டு மற்றும் தளபதி விஜயின் பெயர் ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.