தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் டீஸர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வரும் படம் சர்க்கார். இப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் சர்கார் டீசருக்கான கொண்டாட்டத்தை தற்போதே தொடங்கியுள்ளனர். இதற்காக ட்விட்டரில் #SarkarTeaserDay #SarkarTeaser #இன்றுமுதல்சர்கார்டீசர் ஆகிய ஹாஸ்டேக்குகள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.