Sarkar Shooting Spot Secrets
Sarkar Shooting Spot Secrets

சர்கார் படப்பிடிப்பில் நடந்த பரபரப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

Sarkar Shooting Spot Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்க்கார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்தார்.

படத்தில் ஒரு காட்சியில் அரசியல்வாதியான ராதாரவியை சந்திப்பதற்காக விஜய் மக்களை திரட்டிக் கொண்டு பைக்கில் செல்வார். இந்த காட்சியை படமாக்கிய போது நடந்த பரபரப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது இந்த காட்சியை இரவு 12 மணிக்கு மேல்தான் படமாக்க திட்டமிட்டு தொடங்கினோம். இந்த காட்சிகளை சிட்டிக்குள் தான் படமாக்கினோம். தளபதி விஜய் பைக் வர அவரை பின்தொடர்ந்து ஆயிரம் பைக்குகள் வரும்.

இது மிகவும் ஆபத்தான காட்சி. ஒருவர் மீது ஒருவர் மோதி விடாமல் பாதுகாப்பாக பைக் ஓட்ட வேண்டும். ஒரு ஒரு பைக்கில் விபத்து நேர்ந்தாலும் பின்னி வருபவர்கள் அடுத்தடுத்து விழ வேண்டியது தான் இருக்கும்.

விஜயை சுட்டி இல்ல துணை நடிகர்கள் பாதுகாப்பாக பைக் ஓட்ட அறிவுறுத்தி இருந்தோம். விஜயின் மீது பைக் மோதி விடக்கூடாது என கூறியிருந்தோம்.

நீங்கள் யாரும் விஜயின் பக்கத்தில் இருக்க முடியாது காரணம் இந்த காட்சியை தூரத்தில் இருந்து படமாக்கினால் தான் பைக் கூட்டமாக வருவது தெரியும்.

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் நடந்த விபத்து.. பிரபல நடிகருக்கு அறுவைச் சிகிச்சை

இதனால் நாங்கள் தூரத்திலும் துணை இயக்குனர்கள் வெகுதூரத்தில் காரிலும் இருந்தார்கள். இந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்கள் பைக்கில் வந்து விட்டனர்.

ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டால் சூழ்ந்து விடுவார்கள் என்பதால் விஜய்யை எப்படி காப்பாற்றுவது என பதற்றத்தோடு இருந்தோம்.

ஆனால் தளபதி விஜய் கொஞ்சமும் பதட்டப்படாமல் ரசிகர்கள் இடையே சிக்கிக் கொள்ளாமலிருக்க தொடர்ந்து 2 மணி நேரம் பைக் ஓட்டியதாக கூறினார்.

அதன் பிறகு அவரை ஒரு வழியாக காரில் ஏற்றிக் கொண்டோம் என தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் இதனால் கோபப்படவும் இல்லை பதட்டம் அடையவும் இல்லை என தெரிவித்துள்ளார்.