தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் தினம் தினம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

நேற்று சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருப்பதாகவும் அதற்கான இடம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது அதிகார்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 2-ல் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.