Sarkar Status : தளபதி விஜய் சர்கார் படம் வெற்றியா? தோல்வியா? வசூல் நிலவரம் என்ன என்பது பற்றி பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி விமர்சகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.
இதனால் நெட்டிசன்கள் பலரும் சர்கார் படத்தின் வசூல் நிலவரம் என இணையத்தில் வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சென்னையில் சர்கார் படத்தை வெளியிட்ட பிரபல விநியோகிஸ்தரும் அபிராமி தியேட்டர் உரிமையாளருமான ராமநாதன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
அதாவது அபிராமி ராமநாதன் கூறியதாவது, சர்கார் படம் சென்னையில் போட்ட பணத்தை எடுத்து விட்டது. இனி வசூலாகும் அனைத்தும் எங்களுக்கு லாபம் தான் என கூறியுள்ளார்.
இதனால் தளபதி ரசிகர்கள் சர்கார் சக்ஸஸ் படம் தான் என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.