இளைய தளபதி பட்டம் என்னுடையது தான் எனவும் அது குறித்து பேசியுள்ளார் பிக் பாஸ் சரவணன்.
Saravanan About Ilayathalapathy Title : தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அதன் பின்னர் பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாகவும் நடித்தவர் சரவணன்.
அதுமட்டுமல்லாமல் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
கல்லூரியில் படிக்கும்போது பெண்களை இடிப்பதற்காக பேருந்தில் சென்றதாக கூறி பின்னர் தான் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் இவர் பெண்களை இழிவாக பேசியதாக கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளைய தளபதி பட்டம் விஜய்க்கு முன்பாகவே சரவணனுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1993 ஆம் ஆண்டு வெளியான நல்லது நடக்கும் என்ற படத்தில் இளைய தளபதி சரவணன் என அவரது பெயர் இடம் பெற்றிருந்ததாகவும் அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியானது.
லாரன்ஸ் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா தொற்று – வருத்தத்தில் ரசிகர்கள்
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து சரவணன் விட்டு விட்டுப் பேசியுள்ளார். இதய தளபதி பட்டம் என்னுடையது தான். இயக்குனர் எஸ் ஏ சி தான் அதை உங்களின் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறினார்.
ஆனால் விஜய்க்கு வாய்ப்பு வந்தது எனக்கு வாய்ப்பு வரவில்லை அவ்வளவு தான் என கூறியுள்ளார்.