Saranya Replace Chithra in Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி முல்லையாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Saranya Replace Chithra in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சித்ரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலரும் சித்ராவின் துயரில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றனர். சிரிப்பை மட்டுமே எங்களுக்கு காண்பித்த நீங்கள் உங்கள் சோகத்தை பகிர்ந்து இருக்கலாமே என கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது சித்ரா வேடத்தில் அவருடைய தோழியை விஜய்டிவி நடிகையுமான சரண்யா தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சரண்யா தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார், ஆனாலும் சித்ராவின் இடத்தை நிரப்ப முடியுமா என தெரியவில்லை.

சித்ரா இல்லாத பாண்டியன் ஸ்டோர் சீரியலை பார்ப்பதில் ஆர்வம் இல்லை எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் கூட சித்ராவை பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பலர் பார்த்துள்ளனர். நேற்றைய எபிசோட் இறுதியில் கூட சித்ராவை வைத்து தொடரும் என முடித்துள்ளனர்.

இதனால் தொடர்ந்து சித்ராவின் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நடித்தால் சரண்யா தான் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது.