Saranya Ravichandiran in Valmai

வலிமை படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடிக்க வைத்ததாக பிரபல நடிகை குஷியாக பதிவிட்டுள்ளார்.

Saranya Ravichandiran in Valmai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வந்த நிலையில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்புகள் தொடங்கி படக்குழு நடத்தி வருகிறது. தற்போது தல அஜித்துடன் இணைந்து நடிக்க வைத்ததாக தொகுப்பாளினி சரண்யா ரவிச்சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் செம மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி, ராட்சசன், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாதத்தில் வலிமை அப்டேட் வெளிவர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.