சியான் 60 படத்தின் இசையமைக்கும் பணிகளுக்கு இடையே பறை இசை கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

Santhosh Narayanan Dance in Chiyaan 60 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் 60 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் பிஸியாக உள்ள சந்தோஷ் நாராயணன் பறை கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.