Sanjay Dutt First Look in KGF 2
Sanjay Dutt First Look in KGF 2

Sanjay Dutt First Look in KGF 2 : கன்னட சினிமா துறையின் பிரம்மாண்ட வெற்றியை அளித்து, அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப் சாப்டர்1. இப்படத்தில் நடித்த கதாநாயகன் யாஷ், இந்த படத்திற்கு பிறகு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார்.

உலகம் முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேஜிஎப் சாப்டர்2 படமானது, எப்போ ரிலீஸ் ஆகும்? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதற்கு தகுந்தாற்போல், படத்திற்கு ஏற்ற நடிகர் நடிகைகளை இந்திய அளவில் பிரபலமான நடிகர்களையே படக்குழு தேர்வு செய்து வருகின்றனர். இந்தப்படத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேரக்டர் ஆதிரா.

கேஜிஎப் சாப்டர் 2 படத்தில் ஆதிரா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே, காட்டுமிராண்டித்தனமான கதாபாத்திரம் அவருக்கு கிடைத்துள்ளதாம்.

விஜய் மகனுக்கு வந்த சிக்கல்.. சங்கீதா கொடுத்த ஐடியா, சரியென தலையாட்டிய தளபதி – விஷயம் என்ன தெரியுமா?

தற்பொழுது கே ஜி எஃப் சாப்டர் 2 படத்தின் சஞ்சய் தத்தின் கேரக்டரான வில்லன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப்பார்த்த, திரையுலகமே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று பரவலாக பேசி வருகிறது.