Sangeetha Scold Vijay
தளபதி விஜய் செய்த செயலை கேட்டு சங்கீதா அவரை திட்டி தீர்த்துள்ளார். இதனை பிரபல நடிகரான சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Sangeetha Scold Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜயுடன் சாந்தனுவும் இணைந்து நடித்துள்ளார்.

சாந்தனு தளபதி விஜயின் தீவிர ரசிகர், விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்க சொல்லி தான் கிகியை திருமணம் செய்து கொண்டார் என்பது எல்லாம் நாம் அறிந்ததே.

விஜய் தாலி எடுத்து கொடுத்ததால் நடந்த விபரீதத்தை தான் இப்போது பார்க்க போகிறோம்.

சாந்தனுவின் திருமணத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த விஜய் தன் மனைவி சங்கீதாவிடம் நான் தான் தாலி எடுத்து கொடுத்தேன் என கூறியுள்ளார்.

இதனால் சங்கீதா நீங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷனா? வயதில் பெரியவர்கள் அனுபவம் உள்ளவர்கள் தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என திட்டி தீர்த்துள்ளார்.

இதனை விஜயே தன்னிடம் கூறியதாக சாந்தனு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.