Sangathamizhan Movie updates : Vijay Sethupathi | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Vijay chander | Rashi Khanna

Sangathamizhan Movie updates :

Sangathamizhan Movie updates : இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் குற்றாலத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.