Sanam Vs Nisha in Bigg Boss

ரியோ மற்றும் சனம் செட்டி இடையேயான பிரச்சனை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் உனக்கு என்னதான் பிரச்சனை என சனம் ஷெட்டியிடம் சண்டைக்கு நிற்கிறார் நிஷா.

Sanam Vs Nisha in Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். 54வது நாள் ஆன இன்றைக்கான மூன்றாவது புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் இந்த வாரம் மோசமான போட்டியாளர்களாக இருந்த இருவர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சனம் ஷெட்டி ரியோவை தேர்வு செய்கிறார். பாலாஜி ஆரியை தேர்வு செய்கிறார். சனம் செட்டி இந்த தேர்வில் தனிப்பட்ட கருத்தும் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நிஷா சனம் ஷெட்டி இடம் உனக்கு என்னதான் பிரச்சனை என ரியோவுக்கு ஆதரவாக சண்டையிடுகிறார். இதனால் பலரும் நிஷாவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

அர்ச்சனா, ரியோ, நிஷா, ரமேஷ், சோம் உள்ளிட்டோர் ஒரு குழுவாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து பலர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.