Sanam Shetty Marriage Details

வெளியான புகைப்படத்தால் சனம் செட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sanam Shetty Marriage Details : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும் ஒருவராக இருந்தார். மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் இவர் எதிர்பாராத விதமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி மீண்டும் கடைசி வாரத்தில் உள்ளே சென்றார். தமிழ் பெண் போலவே புடவை கட்டிக்கொண்டு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

இதனால் சனம் ஷெட்டிக்கு திருமணமாகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கர்நாடகாவில் புடவை கட்டிக்கொண்டால் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

சனம் ஷெட்டி கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவர் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.