sanam shetty
பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி மருத்துவமனையில் இருந்து ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sanam shetty admitted hin hospital pic – பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் இருந்த போது சமூக வலைப்பக்கத்தில் அவருக்கு ஆதரவு திரட்டியவர் நடிகை சனம் ஷெட்டி. இவரை டார்கெட் செய்து தர்ஷனின் வெற்றி பாதிக்கப்படுவதாக வனிதா விஜயகுமார் ஷெரினிடம் சண்டை போட்ட போது உருக்கமான வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் ‘ டியூமரால் (சிறு கட்டி) பாதிக்கப்பட்டேன். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. உடல் நலத்தை அலட்சியம் செய்யாதீர்கள். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

அதன்பின் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர், தான் நலமுடன் வீடு திரும்பிவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.