Sanam Shetty About Pen Shakthi Award

கனவில் கூட நினைக்காதது என் வாழ்க்கையில் நடந்துள்ளது என சனம் ஷெட்டி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Sanam Shetty About Pen Sakthi Award : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங் துறையை சேர்ந்த நடிகையான இவர் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக சனம் ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இந்த நிலையில் இவருக்கு பெண் சக்தி விருது உலகநாயகன் கமலஹாசன் கையால் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சனம் ஷெட்டி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் என்னுடைய கனவிலும் நினைக்காத விஷயம் இன்று என் வாழ்க்கையில் நடந்துள்ளது. லெஜெண்ட் கமல்ஹாசன் கையால் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.