Samyukta Trolls About Meera Mitun
Samyukta Trolls About Meera Mitun

சூப்பர் மாடல்னு சொல்லிக் கொள்ள மாட்டேன் என மீரா மிதுனை போட்டியாளர் ஒருவர் கிண்டலடிக்க பிக்பாஸ் வீடு குபீரென்று சிரித்து உள்ளது.

Samyukta Trolls About Meera Mitun : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்றாவது நாளான நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களின் பழைய மறக்க முடியாத விஷயங்கள் குறித்து பேசுமாறு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கிங் மாடலிங் துறையை சேர்ந்த சம்யுக்தா பேசும்போது இதுவரையிலும் பல விளம்பரங்களில் நடித்துள்ளேன். நான் நான் ஒருபோதும் என்னை சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொண்டதில்லை என பேசியுள்ளார்.

சம்யுக்தா இவ்வாறு பேசியதால் அவர் மீராமிதுனை தான் மறைமுகமாக குறை கூறுகிறார் என ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் குபீர் என சிரித்துள்ளது.

இதனையடுத்து அவர் தொடர்ந்து பேசும்போது என் அப்பாவிற்கு என் மீதும் என் அண்ணன் மீது அதிக பாசம். அவருக்கு மாடலிங் துறை பிடிக்காது. இதனால் நான் மாடலிங் விளம்பரங்களில் நடிக்க செல்லும் போது அவரிடம் பொய் கூறிவிட்டு தான் செல்வேன்.

என்னுடைய கணவர் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு என் மகனுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். சிறுவயதில் ஒருமுறை என் மகன் கேரட் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கேரட்டை விழுங்கி விட்டான்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவன் ஆக்டிவாக தான் இருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என கூறிவிட்டனர். ஆனால் அவன் பால் குடிக்கும் போது மூச்சு திணறினான்.

இதனால் எனக்கு சந்தேகம் வந்தது மீண்டும் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது தொண்டைக் குழாயில் கேரட் அடைத்துக் கொண்டுள்ளது. சரியான நேரத்தில் உங்கள் கொண்டுவந்ததாக உயிரை காப்பாற்ற முடிந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த 6 நாள் எனக்கு உயிரே இல்லை.

குழந்தைக்கு என்ன நடந்தாலும் அது தாய்க்கு மட்டும் தான் புரியும் என்பதை நான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.