Samyukta About Fight With Aari

நடிகர் ஆரி பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாதை எல்லாம் பேசி விட்டதாக தெரிவித்துள்ளார் சம்யுக்தா.

Samyukta About Fight With Aari : தமிழ்ச் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். அவர் ஆரியை பார்த்து வளர்ப்பு சரியில்லை என கூறிய வார்த்தையே அவர் வெளியேற்றத்திற்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது என கூறலாம்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் ஆஜீத் நன்றாக விளையாடினாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் ரம்யா பாண்டியன் டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரி உடனான பிரச்சனை பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாது எல்லாம் பேசிவிடடார். ஒரு பெண்ணிடம் எப்படி அப்படியெல்லாம் பேசலாம் என கூறியுள்ளார்.

ஆரி பேசியது என்ன எனவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாதது ஏன் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.