அப்பா, அம்மாவுக்கு கொரோனா உறுதியானதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவர் மருந்து கிடைக்க உதவி செய்யுமாறு சமூக வளையத்ளத்தில் உதவி கேட்டுள்ளார்.

Samyukath Hegde Ask Helps to Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவியுடன் கோமாளி, பப்பி போன்ற சில படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.

தற்போது தீவிரமாக பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் சம்யுக்தாவின் அப்பா மற்றும் அம்மா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் வைத்து மருத்துவச் சிகிச்சை பார்த்து வரும் இவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து உள்ளது. ‌ இவர்களுக்கு இந்த மருந்து கிடைக்காததால் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மருந்து கிடைக்க உதவி செய்யுங்கள் என ரசிகர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

சம்யுக்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உதவி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.