பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samuthirakani Joined in Andhagun Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திரையுலகில் இருக்கும் இடம் தெரியாமல் போனார்.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது அந்தகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூண் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தினை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் 50% முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.