Samantha Yogasana Photos
Samantha Yogasana Photos

தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha Yogasana Photos : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் சினிமாவில அஜித், ரஜினி, கமலை தவிர பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

மேலும் இவர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்து மருமகள் ஆனார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்து வரும் சமந்தா செடி கொடிகளை வளர்ப்பதிலும் யோகாசனம் செய்து உடலை பிட்டாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நாய்களுடன் படுத்து உருண்டு விளையாடும் சமந்தா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.