Samantha Gift to Rakul Preet Singh

முன்னணி நடிகைகள் சரக்கு பாட்டிலை க்யூட்டாக அனுப்பி வைத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha Gift to Rakul Preet Singh : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் அடுத்ததாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவும் நாயகியாக நடித்து வருகிறார்.

சமந்தாவுக்கு திரையுலகில் பல நடிகைகள் தோழிகளாக இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் ரகுல் பிரீத் சிங். தற்போது சமந்தா இவருக்கு மது பாட்டில் ஒன்றை கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.

அதனை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு சமந்தாவிற்கு நன்றி கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.