Samantha Decision on Upcoming Movies

நடிகை சமந்தா கவர்ச்சிப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

Samantha Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ், மற்றும் தெலுங்கு, திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

தமிழில் பானா காத்தாடி, பிருந்தாவனம், நான் ஈ, கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பத்து வருடங்களாக சினிமாவில் இருப்பதாகவும், இனிமேல் கவர்ச்சி படங்களில் நடிக்கப் போவதில்லை. எனவும் நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இருப்பினும் சமீபத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.